கலாம்
பேசிய
இறுதி வாக்கியத்தைக் கூட
முற்றோடு முடித்திருக்கிறாய்
எதிலும்
முழுமை பெற்றிருக்கிறாய்
தலைவனே!
ஏதேதோ
கண்டுபிடித்து
சாதனை புரிந்தாய்
உன்னைப் போல்
மாற்றுறு செய்ய
ஏன் மறந்தாய்?
சாமான்யனாய் இருந்து
சாதனையாளனாய் மாறிய
சகாப்தம் நீ
தாம் விண்ணில் செலுத்திய
ஏவுகணையை
ஆராய சென்றிருப்பாரோ
நம் அக்னிப் பறவை!
இருக்கலாம் இருக்கலாம் என
நாம் தேற்றிக் கொள்ளலாம்
இந்த பூமிக்குத்தான்
எத்தனை அவசரம்
அவரை தனதாக்கிக் கொள்ள
யார் சொன்னது
பூமிமாதா பொறுமைசாலி என்று?
காலனை அனுப்பி
கலாமை அரவணைத்த
அவளது அவசர செயல்
நிச்சயம்
ஏற்புடையதாய் இல்லை
அள்ள அள்ள குறையாத
நம்பிக்கை பாத்திரம் நீ!
நினைக்க நினைக்க
துக்கம் குறைந்தபாடில்லை
உன்னை எண்ணி...
No comments:
Post a Comment