ஆரணி எழுத்தாளருக்கு தமிழக அரசு விருது 29.04.2018, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 127வது பிறந்தநாளை தமிழ்க் கவிஞர் விழாவாக கொண்டாடியது. 2015 ம் ஆண்டின் சிறந்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாளர்களுக்கு பரிசளிப்பும் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசன் அவர்கள் பரிசுகள் வழங்கி விழாச் சிறப்புரை ஆற்றினார். இதில் ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா நந்தகுமாரின் 'பிடிக்குள் அடங்கா மௌனம்' நூலுக்கு 2015 ம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியர் விருது கிடைத்தது. தமிழக அரசின் சான்றிதழும் 30,000/- ரூபாய்க்கான காசோலையும் வழங்கி கௌரவித்தனர்
புகைப்படத்தில்- அமைச்சர் க. பாண்டியராசன் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமாருக்கு விருது வழங்குகிறார். உடன் இரா. குணசேகரன்,வி.ஜி. சந்தோசம், இரா. வெங்கடேசன் மற்றும் முனைவர் கோ. விசயராகவன்.
No comments:
Post a Comment