கடுமையான காய்ச்சல் அடித்தது நகுல்யாவுக்கு. நாளை மிஸ்.
இந்தியாவுக்கான இறுதிப் போட்டி. நூற்றுக்கணக்கான போட்டி
யாளர்களைப் பின்னுக்குத் தள்ளி,இறுதிப் போட்டிக்கு தேர்வான
பத்து பேரில் அவளும் ஒருத்தி.முடிந்தவரை மருந்துகளை விழுங்
கிவிட்டு படுத்து உறங்கினாள்.
காலையில் எழுந்து,கண்ணாடி முன் நின்றவளுக்கு..
அதிர்ச்சி!அம்மை நோய் தாக்கி,முகத்திலும் உடம்பிலும் எழும்பி
இருந்தன நீர் கொப்புளங்கள்.கண்கள் மூடி கண்ணீரை அடக்கினாள்
நகுல்யா.
மாலை மயங்கும் நேரத்தில் காத்திருந்தது அந்த பிரம்மாண்ட
அரங்கம்.போட்டி ஆரம்பமாக,ஆழகிகள் ஒவ்வொருவராக நடந்து
வந்து பார்வையாளர்களின் கண்களை கட்டி போட்டனர். நகுல்யா
வந்தாள்.ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் அமைதி
படர்ந்தது. நடுவர் கேட்டார்...”இந்த தழும்புகளை மீறி வெற்றி
பெறுவீர்கள் என்று நம்புகிறீர்களா?
நிதானமாக கசிந்தது நகுல்யாவின் குரல்...”என் அழகிய
முகத்தை ஏற்கனவே பல ரவுண்டுகளில் பார்த்துவிட்டீர்கள்.இந்த
இறுதிப் போட்டி,என் தன்னம்பிக்கைக்கானது.இன்று தோன்றி
நாளை மறையும் இந்த வடுக்களைப் போல,வெளிப்புற அழகும்
நிலையற்றது;தன்னம்பிக்கை தான் நிலையானது என்பதற்கு இந்த
மேடையில் இப்போது நான் உதாரணமாகிப் போயிருப்பதில்
பெருமையே அடைகிறேன்.என் உடம்பில் இப்போது குறை
ஏற்பட்டிருக்கலாம்.ஆனால்,என் மனது இப்போது தான் மிக
அழகாக இருப்பதாக உணர்கிறேன்.”
மொத்த கூட்டமும் எழுந்து நின்று எழுப்பிய கைதட்டல்
ஓசை, நகுல்யாவின் பேச்சில் லயித்து,தங்களையே மறந்திருந்த
நடுவர்களை லேசாக அசைத்தது.அடுத்த கணமே அவர்களின்
பேனாக்கள் நடமாட ஆரம்பித்தன -இறுதி போட்டிக்கான
மார்க் பட்டியலில்!
wow.. U become very big writer it seems.. Good and congrats.. this blog gives u a more contacts and links for sure.. then we are expecting more from u.. keep it up.. good luck..
ReplyDeleteCheers
Ashok Kumar Jeevanantham
வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி அஷோக்.
ReplyDelete//இந்த இறுதிப் போட்டி,என் தன்னம்பிக்கைக்கானது. இன்று தோன்றி
ReplyDeleteநாளை மறையும் இந்த வடுக்களைப் போல,வெளிப்புற அழகும்
நிலையற்றது; தன்னம்பிக்கை தான் நிலையானது என்பதற்கு இந்த
மேடையில் இப்போது நான் உதாரணமாகிப் போயிருப்பதில்
பெருமையே அடைகிறேன். என் உடம்பில் இப்போது குறை
ஏற்பட்டிருக்கலாம். ஆனால்,என் மனது இப்போது தான் மிக
அழகாக இருப்பதாக உணர்கிறேன்.”//
’அழகி’ என்ற தலைப்பினைப்போலவே இந்த வரிகளும் அழகாக ..... மிக மிக அழகாக உள்ளன. பாராட்டுக்கள். முதல் பகிர்வுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி
ReplyDeleteஅன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (22/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
ஒரு பக்கக் கதைக்கான இறுதித் திருப்பம்...அருமை! ரவிஜி
ReplyDelete