சமீபத்தில் நடந்த குரூப்-2 தேர்வு எழுதினேன்.
எங்கள் அறைக்கு கண்காணிப்பாளராக வந்த ஆசிரியை
குறிப்பிட்ட நேரம் ஆகிவிட்ட பின்பும் ஒஎம்ஆர் [OMR]
ஷீட்டை கொடுக்கவேயில்லை.அனைவரும் வரட்டும்,
வந்தவுடன் எல்லோருக்கும் ஒன்றாக
விளக்கம் சொல்லி
கொடுத்து விடுகிறேன் என காலம் தாழ்த்தினார். பின்
ரவுண்ட்ஸில் வந்த மற்றொரு ஆசிரியையின் “
நேரம்
ஆகிவிட்ட்து,கொடுத்து விடுங்கள்” என்ற
அறிவுறுத்தலின்
பேரில் கொடுத்தார். இது கூட
பரவாயில்லை. தேர்வு
முடிவடைவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் அடிக்கப்படும்
“வார்னிங் பெல்” லை இறுதி மணி என நினைத்து
அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கிவிட்டார்.
அறையை விட்டு பாதி பேர்
கலைந்த
தருவாயில் தான் அவருக்கே தெரிய வந்தது, அது
5 நிமிடத்திற்கு முன் அடிக்கப்படும்
எச்சரிக்கை மணி
என்று. பின், ’எல்லோரும் உள்ளே வாருங்கள், தலைமை
ஆசிரியர் பார்த்தால் பிரச்சனை’ என
அழைப்பு விடுத்தார்.
விடைத்தாளை திரும்ப எங்களிடம் கொடுக்கவும்
இல்லை அதற்காக ஒரு மன்னிப்பு கோரலும் இல்லை.
5 நிமிடங்கள் என்பது
இது போன்ற
அரசுத் தேர்வுகளில் எவ்வளவு முக்கியம் என்பது
அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட தேர்வுகளில்
கண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்கள் முதலில்
சரியான விதிமுறைகளை தெரிந்து கொண்டு
வாருங்கள். சிரமப்பட்டு படித்து வரும்
தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்.
|
Wednesday, November 28, 2012
விதிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
தேர்வில் வெற்றிபெற வாழ்த்த்க்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDelete