Sunday, March 10, 2013
அமில வீச்சு
பெண்களுக்குத்தான் இரக்கமும்
சகிப்புத்தன்மையும் குலசொத்து
என்பது மற்றுமொரு முறை
இங்கே நிரூபணமாகியிருக்கிறது.
தன்னை காதலித்து கர்ப்பவதியாக்கி
சீரழித்து ஏமாற்றிய காமுகனைக்கூட
சட்டத்தின் வீச்சில் எதிர்கொள்கிறாள் பெண்
அமில வீச்சில் அல்ல.
கொடூரர்களே...
பெண்களின் மனதில் இந்த
நச்சு எண்ணத்தை
விதைக்காதீர்கள்...
பூவையர் ஆரம்பித்தால்...
பாதி ஆண்கள்
முகங்கள் சிதைந்து
நடமாட வேண்டியிருக்கும்.
நன்றி:தினமலர்-வாரமலர் 10.3.2013
Subscribe to:
Post Comments (Atom)
நேற்றைய வாரமலரிலும் படித்தேன். நல்லதொரு கருத்து. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅமைதியை புயலாக்காதீர்கள் என்பதான உங்கள் பதிவு அருமை..
ReplyDeleteஏங்க,
ReplyDelete"சாது மிரண்டால் காடு கொள்ளாது"னு சொல்லுரிங்க. ஆமாங்க, ஞாயம்தான். அத உங்க பானியில செமய நச்சுன்னு சொல்லி இருக்கிங்க. அசத்திபுடிங்க போங்க.
ஆனாலும், இந்த பொண்ணுங்க கொஞ்சம் அதிகமாதான் பொறுத்துக்கராங்களோனு எனக்கு அடிக்கடி தோனும்ங்க. "ரௌத்திரம் பழகு"னு பாரதியார் ஆம்பளங்களுக்கு மட்டுமாங்க சொல்லி இருக்காரு, பொம்பளங்களுக்கும் சேர்த்துதானுங்களே....
- கண்ணன், தஞ்சையிலிருந்து.
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்,
ReplyDeleteகாண: http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_15.html
கடைசி வரிகள் மிகவும் உண்மை. . .
ReplyDeleteஇன்று
ReplyDeleteRs. 3000 REGCLEAN PRO V 6.2 இலவசமாக. . .
...
அருமையான படைப்பு! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை ... உண்மை ...
ReplyDelete