வேலூரில் மூடியிருந்த ஒரு நியாய விலைக்கடையின் வெளியே இருந்த பலகையில் இந்த வாசகத்தை கண்டேன். ‘இன்று செயலரின்
அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன்.
தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு மன்னிக்கவும்’ என்று எழுதி இருந்தது.
கடைக்கு பொருட்கள் வாங்க வந்த
அத்தனை பேரும் இந்த பலகையை வாசித்து விட்டு, ‘சரி சரி அவரும் மனிதர்தானே, விடுப்பு
எடுத்துள்ளார். நாளைக்கு வாங்கிக்
கொள்ளலாம்’ என்று பேசியபடி
கலைந்தனர். இல்லையெனில் பெரும்பாலானோர்
அவரை சபித்தபடி சென்றிருப்பர்.
‘கறுப்பா இருப்பாங்களே
அவங்களா’ எனத்தான் பொதுப்படையாக
அடையாளத்திற்கு கூறுகிறோம். என் நண்பர்
ஒருவர், ‘அடர் நிறத்தில் அருமையா
இருப்பாங்களே...அவங்களைத்தான் நான் சொல்கிறேன்’ என்று அற்புதமாக அந்த மனிதரை அடையாளப்படுத்தினார். வார்த்தைகளின் ஜாலம் என்பது மனமாற்றம் என்னும்
மாயாஜாலத்தை அள்ளிக் கொடுக்கும் பொக்கிஷம்.
வடலூர் வள்ளலார் ராமலிங்கர்
தன் இள வயதில் பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார். ஆசிரியர் வந்தவுடன் மாணவர்கள் ‘ஓதாமல் ஒரு
நாளும் இருக்க வேண்டாம்’ என்ற பாடலைப் பாடினார்களாம். அந்த பாடல் ‘வேண்டாம்’ என்று எதிர்மறையான செயலைக் குறிக்கும் வார்த்தையைக் கொண்டு
முடிகிறது. எனவே அதை பாடமுடியாது என்று
மறுத்தார். ஆசிரியருக்கு கோபம். அப்படியானால் ‘வேண்டும்’ என்று முடிகிற மாதிரி நீயே பாடு என்று அவரை பணித்தார். வள்ளலார், ‘ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’ என்று
கம்பீரமாகப் பாடினார்.
சில கடைகளில், ‘கேமரா உங்களை
கண்காணிக்கிறது. கவனமாக இருங்கள்’ என்ற
வாக்கியம் இருக்கும். இந்த வாக்கியத்தை
விட, ‘கேமரா செயல்படுகிறது.
புன்னகையுங்கள்’ என்ற வாக்கியம் நம்மை
பெரிதும் கவர்கிறது தானே. அலுவலகங்களில்
‘அனுமதி இல்லை’ என்ற வார்த்தை
ஏற்படுத்தும் ஒரு வித அச்சம். ‘அனுமதியுடன் உள்ளே செல்லவும்’ என்ற போது இறுக்கம் குறைகிறது அல்லவா? உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்தது தான் நம்
வாழ்க்கை. அந்த உணர்வுகள் காயப்படாதவாறு நாம் நல்வார்த்தைகள் எனும்
பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்து எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளலாம்.
பல ஆண்டு பகைகளை எத்தனையோ
கடித வரிகள் தீர்த்து வைத்திருக்கிறது.
நாம் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமை உண்டு. ‘மெக்டவுகல்’ போன்ற உளவியல் அறிஞர்களும் இதை
ஒத்துக்கொள்கின்றனர். ’விஸ்வரூபம்’
பிரச்சனையில் நடிகர் கமலஹாசன் சொன்ன ‘யார் மீதும் எனக்கு கோபம் இல்லை. வருத்தம்
மட்டுமே’ கூட இந்த ரகம் தான்.
நாமும் நம் அன்றாட வாழ்வில்
அற்புதமான அழகியல் சொற்களை அணிந்துரைத்தால் அளவிற்கரிய மாற்றங்கள் நம் வாழ்விலும்
நிகழும்.
//கேமரா செயல்படுகிறது. புன்னகையுங்கள்’ என்ற வாக்கியம் நம்மை பெரிதும் கவர்கிறது //
ReplyDelete// நாமும் நம் அன்றாட வாழ்வில் அற்புதமான அழகியல் சொற்களை அணிந்துரைத்தால் அளவிற்கரிய மாற்றங்கள் நம் வாழ்விலும் நிகழும்.//
மிகவும் அழகான பதிவு. வாழ்த்துகள். பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
தங்களின் தொடர் வருகைக்கும் தெளிவான பாராட்டுக்கும் நன்றி
Deleteமுடிவில் முத்தான வரிகள்... உண்மை வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் உணர்வுபூர்வமான வாழ்த்துக்கு நன்றி
Deleteவார்த்தைகளில் உலகையே மாற்றலாம் ... அருமையான கருத்து
ReplyDeleteஅருமையா சொல்லிட்டீங்க. நன்றி.
Deleteயோசிக்க வைக்கும் பதிவு. நன்றிப்பா.
ReplyDelete