வேலூரில் தினமலர் வீட்டு உபயோக பொருட்காட்சி ஏற்படுத்திக் கொடுத்த நடந்த ”கதை பயிற்சி”
நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்துமதி அவர்களுடன் வாசகிகளான நாங்கள் மனதளவில் நெருங்கி போனோம். சுமார் மூன்று மணி நேரம் கடந்தததே தெரியவில்லை.
பயிற்சிக்கு செல்வதற்காக
காலையில் வெறும் வயிருடனே ஆரணியிலிருந்து பேருந்தில் ஏறிவிட்டேன். மதியம் 2.30 மணி வரை என் வயிறு பசியை
எனக்கு உணர்த்த சற்றே மறந்து போனது.
‘அனுபவித்து எழுதுங்கள்’ என்பதே
அவரின் முதல் சாராம்சமாக இருந்தது.
எழுதுபவர்கள் முதலில் நிறைய
வாசிக்க வேண்டும். அதிலும், வாசிப்பை ரசித்து நேசியுங்கள் என்றார். அந்த
ரசனைத்தன்மை தான் கதைக்கு உரமாக தேவைப்படுகிறது என்பதை அவருக்கே உரிய நடையில்
சுவைபட தெரிவித்தார்.
தம் வாழ்வில் நடைபெற்ற சில முக்கிய
நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அவர் விளக்கியது அவரின் சான்றாமையை காட்டியது. அவரின்
அர்ப்பணிப்பு உணர்வையும் இறை பக்தியையும் மெய்சிலிர்க்க கவனித்துக்
கொண்டிருந்தேன். அதனால் இடையில் அவர் என்னை பேசச் சொன்ன போது கூட உணர்வற்று
நின்றுவிட்டேன். அவரின் அளுமையின் வசீகரம் எங்கள் அனைவரையும் கட்டிப் போட்டது.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதிருமதி உஷா அன்பரசு அவர்களும் இதுபற்றி இன்று அவரின் வலைத்தளத்தில் எழுதியிருந்த்தைப் படித்தேன்.
அன்புடையீர், வணக்கம்.
ReplyDeleteஇன்று நான் என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ’அறுபதிலும் ஆசைவரும்’ என்ற சிறப்புப்பதிவு ஒன்றுக்கு வருகை தந்து கருத்துக்கள் கூறி சிறப்பித்துள்ளீர்கள். மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.
அதேபோல 13.08.2013 அன்று நான் மேலும் ஓர் சிறப்புப்பதிவு வெளியிட்டுள்ளேன். தலைப்பு: ”ஆயிரம் நிலவே வா! ...ஓர் ... ஆயிரம் நிலவே வா!! “
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
நூற்றுக்கணக்கானவர்கள் வருகை தந்து வாழ்த்தி சிறப்பித்துள்ளார்கள், அதையும் தாங்கள் அவசியமாகக்காண வேண்டும். அதற்கும் தாங்கள் தங்களின் மேலான கருத்துக்களை அளிக்க வேண்டும் என நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.
தங்களுக்கு இதில் விருப்பமும் இருந்து, நேரமும் ஒத்துவந்தால் தயவுசெய்து வந்து பாருங்கள், மேடம்.
பிடித்திருந்தால் தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
அன்புடன் VGK
valambal@gmail.com
மகிழ்வான தருணங்கள் மறக்க முடியாதவை!
ReplyDelete