நாலு வீடு
கொண்டிருந்த தங்கப்பனைக்
கூட இடுகாட்டு
ஆறடி நிலத்தில்
ஏழு பேருக்கு மேலே
எட்டாவதாகத்தான்
புதைத்தனர்
புல் முளைத்த
பழைய குழி பார்த்து
சில பல
மண்டை ஓடுகளின்
சாட்சியுடன்.
ஆறடி தான் உனக்கு
சொந்தம் என்ற
அப்பத்தாவின் வார்த்தையை
பொய்யாக்கி இருந்தது
122 கோடி
மக்கள்தொகை.
நன்றி:தினமலர்-வாரமலர்
சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான [கவிதை] ஆக்கம்.
ReplyDeleteமிகவும் ரஸித்த முத்திரை வரிகள்:
//பழைய குழி பார்த்து சில பல மண்டை ஓடுகளின் சாட்சியுடன்.//
//ஆறடி தான் உனக்கு சொந்தம் என்ற அப்பத்தாவின் வார்த்தையை பொய்யாக்கி இருந்தது 122 கோடி மக்கள்தொகை.//
பாராட்டுக்கள்.
>>>>>
தினமலர் வாரமலரில் கவிதை பிரசுரிக்கப்பட்டதற்கு, என் அன்பார்ந்த் இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅறடி நிலம் என்ற தலைப்பும், தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள படமும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
valambal@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள ”ஆயிரம் நிலவே வா ! .... ஓர் ஆயிரம் நிலவே வா!!” + “அறுபதிலும் ஆசை வரும்” ஆகிய இரண்டு சிறப்புப்பதிவுகளுக்கும் தாங்கள் அன்புடன் வருகை புரிந்து, அரிய கருத்துக்களைக்கூறி பின்னூட்டமும் அளித்து, உற்சாகப் படுத்தியுள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
ReplyDeleteThanks a Lot ;)))))
GOPU