18.03.2017 அன்று விகாஸ் வித்யாஸ்ரம்
மெட்ரிக் பள்ளி நெசல் ஆரணி, மற்றும்
விகாஸ் வித்யாலயா நர்சரி பள்ளி ஆரணி
இணைந்து நடத்திய ஆண்டு விழாவில்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும்
பரிசுகள் வழங்கிய புகைப்படங்கள்.
விழாவில் பள்ளியின் முதல்வர்
திருமதி. எம்.ஆர்.சரஸ்வதி, தாளாளர்
திரு. ரமேஷ் ஆனந்த் மற்றும் விகாஸ் சேவா
டிரஸ்ட்டின் தலைவர் திருமதி. கஸ்தூரி தலைமை
தாங்கினர். வரவேற்புரைக்குப் பின் நான் ஆற்றிய
சிறப்புரையில் சில. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு
கதை சொல்வதால் ஏற்படும் முக்கியமான மூன்று
நன்மைகள் குறித்து பேசியதாவது:
முதலில் கதை கேட்பதால் குழந்தைகளின்
கற்பனை திறன் வளம் பெறுகிறது.
அவர்களின் விரி
சிந்தனை தூண்டப்பட்டு பல்வேறு விதமான கோணங்களில்
அவர்கள் சிந்திக்க
துவங்குகின்றனர். இரண்டாவதாக
அவர்களுக்கான அறிவுரைகளை இயல்பாக அவர்களிடம்
தெரிவித்தால் கசப்பு மருந்தை உட்கொள்பவர்கள் போல் அலுத்துக்கொள்வார்கள். ஆனால்
இப்படியான
அறிவுரைகளை கதை என்னும் இனிப்பு தடவி
கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்வார்கள்.
மூன்றாவதாக கதை கேட்கும் குழந்தைகளுக்கு
புத்தி சாதூர்யம்
பெருகுகிறது. பிற்கால வாழ்க்கையில்
இக்கட்டான காலகட்டங்களில் இந்த புத்தி
சாதூர்யம்
மூலம் அவர்கள் துரிதமாக செயல்பட்டு தங்களை தற்காத்துக்கொள்வார்கள்.
அதனால் மாணவ
மாணவிகள் பாட புத்தகங்களைத் தாண்டி கதைகள்
கேட்கும், படிக்கும்
ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாகப் பெற்றோர்கள்
விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்..
No comments:
Post a Comment