Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Saturday, April 7, 2012

திருமண விழாவில்...

       
                


        சமீபமாக பெரும்பாலான திருமண விழாக்களில்
என் கண்ணில் பட்ட சில காட்சிகள் இதோ உங்களுக்காக...
திருமண விழாவில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள்
வந்த நோக்கத்தைக்கூட மறந்து செல்போனில் உரையாடியபடியே
கெட்டிமேளம் கொட்டுகையில் கடனே என அட்சதையை விசிறி
விட்டு பந்திக்கு இடம்பிடிப்பதில் மும்முரமாய் உள்ளனர்.
           நம்ம வீட்டு விசேஷத்திற்கு வந்தார்களே
அதனால் போயாக வேண்டுமே என்ற நிர்பந்த்த்தில் கடனை
கழிப்பது போல் பாதி பேர் வந்து விட்டு செல்கின்றனர்.
          புது டிசைன் நகை,பட்டுப்புடவையை பார்வையிட
ஒரு கூட்டம்.
           குறைகளை பட்டியலிட வாயில் பீடா குதப்பியபடி   
இறுதிவரை ஒரு குழுவாய் குழுமியிருக்கும் கூட்டம்.
            ரிசப்ஷனில் மணமக்களுக்கு பரிசு கொடுக்க
பெரிய ‘கியூவில் நிற்கும் போது ஏற்படும் சலிப்பை
பெரிதாக முணுமுணுக்கும் சராசரி கூட்டம். இப்படி நிறைய...
   
       ஆனால், நம்மில் எத்தனை பேர் மணமக்களை மனதார
வாழ்த்துகிறோம்? போன நோக்கத்தைக் கூட மறந்து
கடனை கழிக்க அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்?
        மணமக்கள் இருவரும் ஒன்றுகூடி பல்லாண்டு
ஒற்றுமையாக வாழ வேண்டும் என அட்சதை போடும்
போதும்  பரிசு கொடுக்கும் போதும் ஒரே ஒரு நிமிடம் மனமுவந்து
வாழ்த்தி விட்டு வரலாமே. கூட்டு பிரார்த்தனை போல
கூட்டு வாழ்த்திற்கும் ஒரு நல்ல சக்தி [வைப்ரேஷன்] உண்டு.
நமக்கும் விழாவில் கலந்து கொண்ட்தில் ஆழ்ந்த திருப்தி
ஏற்படும். ஓகேவா?

2 comments:

  1. கூட்டு பிரார்த்தனை போல
    கூட்டு வாழ்த்திற்கும் ஒரு நல்ல சக்தி [வைப்ரேஷன்] உண்டு.
    நமக்கும் விழாவில் கலந்து கொண்ட்தில் ஆழ்ந்த திருப்தி ஏற்படும்.

    அருமையான பகிர்வு பயனுள்ளது..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நாம் வாழ்த்தாவிட்டாலும் அவர்கள் நன்றாகவே வாழ்வார்கள் என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம் .... அதனால் இப்போ நமக்கு சோறுதான் முக்கியம்...!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete