அணு உலை
பற்றிய அச்சங்களோ
2ஜி அலைக்கற்றை
விசாரணைகளோ
விலைவாசி ஏற்றமோ
அவ்வப்போது அச்சுறுத்தும்
குறை ரத்த அழுத்தமோ
அன்றைய இருவேறு
கொடூர சாலை விபத்துகளோ
எதிர்வீட்டு கூட்டுக்
குடித்தன ஒப்பாரிகளோ
அலுவலக அசாதாரண
அலைக்கழிப்போ
எதுவுமே
பெரிதாக தெரிவதில்லை....
மின்சாரமின்றி பறிபோன
சீரியல்களை நினைத்து
நித்தம் கண்ணீர் விடும்
அம்மாவை நினைக்கும்போது...!
அறியாத நிலை என்ன செய்வது பாவம்..
ReplyDeleteநல்ல கவிதை
இப்போ BIGG BOSS...
ReplyDelete