கங்கா ஸ்நான நல்லெண்ணெய் வாசம்
அடித்து நொறுக்கிய ஐப்பசி மழை
புத்தாடை உடுத்திய இளந்தளிர்களின் நடை
நோன்பு எடுக்கும் மும்முரத்தில் வீடு
தலைதீபாவளிக் கொண்டாட்ட்த்தில் அக்கா
பலகாரத் தயாரிப்பில் படுபிஸியாய் பாட்டி
புது எண்ணம் பூக்கும் தீபஒளி
மத்தாப்பு வெள்ளத்தில் அடித்துச்செல்லும் மழலைகள்
புஸ்வானத்தில் பூக்கும் குடும்பத்தாரின் புன்னகை
ஆயிரம் வாலாவாய் வெடித்துப்போன பகைகள்
வாழ்க்கைச் சக்கரத்தில் வந்துபோகும் திருவிழா
தடுப்பை உடைத்தோடும் நதியின் உற்சாகம்
சொந்தங்கள் கூடி மகிழ்வுறும் நாளில்
சற்றேனும் நினைத்துப் பார்ப்போம்
நமக்காக கந்தகத்தூளைத் திரியில் கோத்து
ஆபத்து அரக்கனை அருகாமையிலேயே இருத்தி
பதற்றமாய்ப் பணிபுரியும்
பட்டாசு ஆலைகளின்
நமத்துப் போன பணியாளர்களை
No comments:
Post a Comment