விடியலுக்கான நீர்ப்பரப்பு
அவள் கண்களில் தெரிந்தும்
உணர்வுகளின் சிறகு விரித்து
சிலிர்க்கிறேன் தினமும்
நித்தம் நாறும்
நினைவுக் குப்பைகளிலிருந்து
தேடுகிறேன் மின்சாரத்தை
அவள் மீது செலுத்த.
பதின்பருவ பழக்கங்கள்
பழிவாங்கலாய்த் தொடர
அவளைச் சீரழிக்கும் எண்ணமே
சிக்கலின்றி அலைமோதுகிறது.
போதை தலைக்கேறிய
நண்பனின் நாராசத்தில்
உதித்த யோசனைக்கு செவிசாய்த்து
சாத்தானை உட்புகுத்தியாயிற்று.
நிராகரிக்கப்பட்ட என்
காதலின் வலியை அவளுக்கு
உணர்த்த என் கைக்கு
கிடைத்த ஆக்ரோஷ ஆயுதம்.
பாரபட்சம் பார்க்கும்
அவள் பார்வையை
பதம் பார்க்க
பாய முனைகிறேன்.
மண்மீது குடுவையில்
பாதுகாப்பாயிருந்ததை
மனம் மரத்துப் போயிருந்த
ஒரு மண்வாசனை நாளில்
மறைத்து கொண்டு வந்தாயிற்று
அவளின் புன்னகை
பொங்கும் முகவாயில்
அமிலப் பிரவாகம்
பொங்க காத்திருக்கிறேன்.
அவள் வருகையை எதிர்பார்த்து
தொக்கி நிற்கிறேன்
அகால வேளைகளிலும்
அதிகாலை இருளிலும்.
தொலைந்த கனவுகளும்
தொல்லை தந்த சுவடுகளும்
வாழ்வதற்கான நியாயத்தை
கற்பிக்க மறந்த நிலையும்
உள்ளே இருந்த அரக்கன்
விழித்த நிலையும்
ஒன்று சேர
அக்கொடூரம் நிகழ்ந்தே விட்டது.
எரிமலைக் குழம்பின் தகிப்பில்-அவள்
அவளின் கதறல் ஒலி
மூளைக்குள் நுழைந்து மின்னலை உருவாக்க
இரத்தம் முழுதும் உறைகிறது
அவள் துடிதுடிப்பதை
இதயம் துடிக்க மறந்து பார்க்கிறது
காணச் சகியாது
கலவரமாகி மறைகிறேன்.
தொலைதூர அலறலும்
மனதை உலுக்குவதாய் இருக்கிறது.
காதல் செய்ய மறுத்ததற்கா
இப்படியொரு செயல் செய்தாய்?
மனசாட்சி முதன் முறையாய்
பளார் பளார் அறை விட்டு
சட்டையைப் பிடித்து கேள்வி கேட்ட்து.
ஐயோ.............
இந்த இழவு
சற்று நேரம் முன்பு
என்னிடம் இப்படிக்
கேட்டிருக்கக் கூடாதா...?
உணர்ச்சி வசப்பட்டு, மிருகமாய் மாறி, க்ஷண நேரத்தில் செய்துவிடும் கொடுமை.;(
ReplyDeleteதான் அவளால் நிராகரிக்கப்பட்டாலும், அவள் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், யாருடன் இருந்தாலும், நல்லபடியாக வாழட்டும் என நினைப்பது தான் உண்மையான அன்புடன் கூடிய காதல் ஆகும். ;)
உள்ளே நுழைந்த அரக்கன் என்ன வேண்டுமானாலும் செய்யும்...
ReplyDeleteஇன்று நிறைய அரக்கன்களுக்கு தேவையா வாழ்வு...?