அன்பு எதிர்பாக்கும்
குழந்தைகள்...
அவ்வப்போது முறிந்து விழும்
மெல்லிய மன உணர்ச்சிகள்...
நிரம்பி வழியும்
நிஜங்களின் சர்ச்சைகள்...
கனவாகிப் போன
சின்ன சின்ன ஆசைகள்...
நீண்டுக் கொண்டே போகும்
பகிரப்படா சங்கதிகள்...
ஓடிக் கொண்டே இருக்கிறோம்...
வீட்டையும் உடன்கட்டை
ஏற்றுகிறோம்...
நாங்கள்
வேலைக்கு செல்கிறோம்... !
நன்றி: தினமலர்-பெண்கள்மலர்
பகிராத சங்கதிகள்...எனப்பகிரப்பட்டவைகள் மிக அருமை.
ReplyDeleteதினமலர்-பெண்கள் மலரிலும் படித்து ரஸித்தேன்.
//ஓடிக் கொண்டே இருக்கிறோம். வீட்டையும் உடன்கட்டை ஏற்றுகிறோம்.//
வேலைக்குச் சென்றுவரும் பெண்கள் பாடு மிகவும் கஷ்டம் தான். பல சின்னச்சின்ன சந்தோஷங்களையும் கூட தியாகம் செய்ய நேரிடுகிறது என்பதே உண்மை...
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
யதார்த்தமான உண்மை...
ReplyDeleteஉண்மையான ஒன்று..
ReplyDelete