Thursday, January 6, 2011
பிள்ளைகள் உணர்வை மதியுங்கள்
எனக்கு தெரிந்தவர் மகனுக்கு பெற்றோர்
பார்த்து பேசி பெண் கிடைக்கப் பெற்றது.நிச்சய
தாம்பூலமும் நன் முறையில் முடிந்தது.அது
முதல் பெண்ணும் மாப்பிள்ளையும் நித்தம்
அலை பேசியில் பேசிக் கொண்டனர்.பேசிக்
கொண்ட தோடு மட்டு மின்றி ஓட்டல்,சினிமா
என்றும் சென்றுள்ளனர்.
திடீர் நிகழ்வாக பெண்ணின் பெற்றோருக்கு
மாப்பிள்ளை வீட்டாரை பிடிக்காமல் போக
திருமணத்தை வேண்டாமென்று தட்டிக்கழித்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் இறங்கி வந்தும் பயனில்லை.
திருமணம் நிச்சயத்தோடே நின்று போனது.
ஆனால்,தினம் அலை பேசியில் பேசிக் கொண்ட
இளசுகள் ஸ்தம்பித்து போயினர்.பெற்றோரின்
வார்த்தைக்கு இணங்குவதா உணர்வுக்கு மதிப்பு
கொடுப்பதா என விழி பிதுங்கினர்.
பெற்றோர்கள் ‘திருமணத்திற்கு முன் பேசிக்
கொள்ளட்டும்,இந்த காலத்தில் சகஜம் தானே’
என முதலில் சொல்லி விட்டு தங்கள் ஈகோ
பிரச்சனையால் வெட்டி விடுவது நன்றாகவா
இருக்கிறது?
திருமணத்துக்கு முன் அனைத்தையும் அளவோடு
வைத்துக் கொள்வது இளசுகளுக்கும் தகும்.வீணான
சங்கடத்தை நாமே ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.?
Subscribe to:
Post Comments (Atom)
பவித்திர நான் பிறந்த மண்ணில் ஒரு வாசமலர் நெகிழ்ந்து போனேன் உனக்கும் , உனது எழுத்துக் கோளுக்கும் உள்ள நேசத்தை ......
ReplyDeleteநானும் ஆரணி தான் சொல்லிக்கொள்ள பெருமையாக இருக்கிறது...
நன்றி !!!
நண்பன்
சுந்தர்