Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Tuesday, January 25, 2011

வேலை



    வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி வித்யாவதி.
மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும்
பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்!

       மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது
என விழிபிதுங்கினாள்.

      இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள்
நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது.
ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும்
செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை
அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து
கவனிக்கலானாள் வித்யாவதி.

       “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம்
எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப்
பாருடா”-இது முதலாமவன்.

       “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக்
கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும்
வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன்.

       “பூக்களைத் தொட்டு எண்ணும்போது
ஏற்பட்ட உணர்வும் வாசமும் ஒருவித புதுத் தெம்பைக்
கொடுத்துச்சு.ரொம்ப ரசிச்சுச் செஞ்சேண்டா”-இது
மூன்றாமவன்.

       மூன்றாமவனுக்கே கிடைத்தது வேலை!


 நன்றி  :  கல்கி

5 comments:

  1. என்னங்க பவித்ரா, பின்றீங்க. "இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்" என temp plate போட்டு வச்சுக்கணும் போலிருக்கே... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மென்மையான மன உணர்வைப் பிரதிபலிக்கும் கதை.
    ரசித்தேன்.
    இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  3. intha varikal nalla artham ullatha ka ullathu nan tamilarasan yeankum athiga ma kavithaigal elutha pedikum nan padipathal antha sukathai ezhakin ren kinren all the very best ka

    ReplyDelete