நடுநிசி இரவில் வரும்
அலைபேசி அழைப்புகள்
அதன்பிறகான அவரின்
நீண்ட உரையாடல்கள்
இரவு உணவை
தவிர்த்த பல இரவுகள்
சுவாசம் அறிந்த மயக்கும்
புதிதொரு வாசனைகள்
வகிடெடுக்கா இளம்
பெண்ணுடன் ஜோடியாய்
பயணித்ததை பார்த்த
அந்த கணங்கள்
ஜடமாய் இப்படி
பழகத்தான் வேண்டியுள்ளது...
கல்வி கொடுக்காமல்
கண் மூடிய
தந்தையை நினைத்தும்
படிப்பில் மும்முரமாய்
இருக்கும் என்
பிள்ளைகளை நினைத்தும்.
மனதை கனமாக்கிய நல்ல கவிதை.
ReplyDeleteநன்றி பத்மினி.
ReplyDelete