Thursday, December 23, 2010
கொஞ்சம் யோசியுங்க....
சமீபத்தில் தொலைதூரக் கல்வியில் தேர்வு
எழுதினேன்.பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான
பி.எட். தேர்வுகளும் உடன் நடைபெற்றது.எனக்குப்
பக்கத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசிரியை
தேர்வு எழுதினார்.
அவர் நிறைய ‘பிட்’ பேப்பர்களை எடுத்து வந்து
சர்வசாதாரணமாய் காப்பி அடித்தார்.மேலும் வெளியில்
சென்று தன் தோழியான மற்றொரு ஆசிரியையுடன்
காப்பி அடித்த வரலாறை விரிவாக விளக்கினார்.அந்த
தோழியும் தன் ‘பிட்’அனுபவத்தை பகிர்ந்துக்
கொண்டிருந்தார்.எனக்கோ பெரும் அதிர்ச்சி.
மாணவர்கள் காப்பி அடித்தால் அதைத் திருத்தி
சிறந்த பண்புகளின் மூலம் நல்வழிப்படுத்த வேண்டிய
ஒரு ஆசிரியர் இவ்வாறு இருக்கிறாரே என மனம்
வெதும்பியது.எதிர்கால இந்தியாவை வலுவாக்க தோள்
கொடுக்கும் ஆசிரிய பணி எவ்வளவு சிறந்தது?.அவ்வாறு
இருந்து இப்படிப்பட்ட செயல் செய்வது வெட்கப்பட
வேண்டிய விஷயமாக எனக்குப் படுகிறது.உங்களுக்கு?
Subscribe to:
Post Comments (Atom)
ஹலோ பவித்ரா...
ReplyDeleteநான் பெண்கள் மலர் வாசகி..உங்களை வெகு நாட்களாக அங்கங்கு வாசித்து வருகிறேன்.. நலம் தானே? நான் கூட அப்பப்போ சிலது எழுதிக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் வாசியுங்களேன்..
நன்றி கிருஷ்ணப்ரியா... நீங்கள் பெண்கள் மலர் வாசகியா? வாவ் நீங்கள் எழுதி வெளிவந்ததை எனக்கு தெரியப்படுத்துங்களேன். நானும் வாசிக்க ஆவலாய் உள்ளேன்.arninanda@gmail.com க்கு தெரியப்படுத்துங்கள்
ReplyDeletea dis s really a thing which is to be felt by one who do dis kind of action
ReplyDeletehello medam ...ஆரணி பற்றி விடயங்களை தேடிய போழ்து உங்கள் blogspot
ReplyDeleteபடிக்க நேர்த்தது உங்கள் கட்டுரைகளை ஓர்குட் தளத்திலும் பதிவு செய்யலாம்
ஓர்குட் ஆரணி communiti http://www.orkut.co.in/Main#Community?cmm=13830572
தங்கள் யோசனைக்கு நன்றி..........
ReplyDelete