”நேத்து காலையில ரிப்பேரான டி.வி.இன்னும் சரி
செய்யல. எல்லா சீரியலும் போச்சு. யார்கிட்ட போய்
கதையகேக்கறது?” சுமதி சிடுசிடுத்தாள்.குழந்தைகளும்
அப்பாவை வெறுப்புடன் பார்த்தனர்.
வேறு வழியில்லாமல் கேரம் போர்டு விளையாடினார்கள்.
விளையாட்டு சுவாரஸ்யத்தில்,டி.வி.மறந்துபோனது.சிரித்துச்
சிரித்துப் பேசி கன்னமும் வாயும் வலியெடுத்துக் கொண்டது
சுமதியின் மனது மெல்ல யோசித்தது. எத்தனை நாளா
யிற்று, இப்படி குடும்பமே சிரித்து ...டி.வி.யில நாடகங்களைத்
தவற விட்டோம்னு வருத்தப்பட்டோமே, இத்தனை நாளும்
இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களைத் தவற விட்டிருக்கோம்.
எவ்வளவு பெரிய இழப்பு?
எத்தனை மகிழ்ச்சியான தருணங்களைத் தவற
விட்டிருக்கோம்.... அந்த நேரத்தில் காலிங் பெல் அடித்தது.
கதவைத்திறந்தாள்.
“ நான் டி.வி.மெக்கானிக் சரவணன். ஐயா வரச்சொன்னாரு...”
“ஓ...வந்து...சாரி, நான் அவசரமா வெளியூர் போறேன்.
அடுத்தவாரம் வர்றீங்களா ப்ளீஸ்...”
“சரிம்மா...”
எப்படியும் ரிப்பேரான டி.வி.யை சரி செய்யத்தான் போறோம்.
ஒரு வாரமாவது இந்த சந்தோஷம் நீடிக்கட்டுமே என அவள்
மனம் ஏங்கியது.
நன்றி:குமுதம்
நன்றி:குமுதம்
No comments:
Post a Comment