Saturday, December 18, 2010
கசப்பு
ரேகாவின் முகத்தில் ஈயாடவில்லை.
ரங்கசாமி தொடர்ந்தார்,”பாரும்மா... நான் அதிகமா
கேக்கல.வேலைக்குச் சேர்ந்தா கொடுத்ததுக்கு மேலே
சம்பாதிச்சுடப்போறே...”
” சார், எங்கப்பா வேலையத்தான் கேக்குறேன்.
நீங்க கேட்ட எல்லா சான்றிதழும் இருக்கு. நீங்க
கையெழுத்துப் போட்டு அனுப்பிச்சா,வேலை முடிஞ்சா
மாதிரி. ப்ளீஸ்... எங்களால அவ்வளவு பெரிய தொகைய
புரட்ட முடியாதுங்க.”
“அப்படியா... சரி,வேலை வரவேண்டிய நேரத்துல
வரும். நீ போகலாம்........”தொண்டைக்குழி அடைக்க,
பேச இயலாமல் வெளியேறினாள் ரேகா.
ரங்கசாமிக்கு,இரவு திருமண விருந்தில் அளவுக்
கதிகமாக உண்டதில் அஜீரணத்தில் மாரடைப்பது போல்
உணர்வு. ஒரு கணம், ’ஹார்ட் அட்டாக் ’வந்து பலர் மாலை
போடுவது போல் ஒரு பிரமை.
தூங்கிக் கொண்டிருந்த 10வது படிக்கும் மகளையும்
மனைவியையும் பார்த்தார். ஏனோ, ரேகாவின் ஞாபகம்
வந்து வந்து போனது.தான் இறந்து தன் மகளோ மனைவியோ
இப்படி கண்கலங்கி இன்னொரு மேஜை எதிரே நிற்பதாக
மனதில் நிழலாடியது.
எண்ணங்களினூடே எப்படியோ தூங்கிப் போனார்.
அன்றைய பொழுது ரேகாவிற்குமாக சேர்ந்தே விடிந்தது.
நன்றி:குமுதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment