Banner

என் அன்பான கணவருடன்

Tuesday, May 3, 2016

தின மலர்-பெண்கள் மலர் 30.04.2016 இதழில் வெளிவந்த கவிதை

கோடை விடுமுறை


மீறுன வளத்தியும்
மிஞ்சுன பேச்சுமாகத்தான்
பேசித் திரிவோம்

யாருக்கும் அடங்காமல்
அழுக்கு மூட்டைகளாய்
சுற்றி வருவோம்

காய்ந்த கருவாடாய்
கழனியில் காய்பறித்து
திருடித் தின்போம்

முயலுக்கு மூன்று காலாய்
சேமியா குச்சிஐஸ்க்கு
பிடிவாதம் பிடிப்போம்

நித்தம் விளையாட்டுகளில்
சமரசம் காணாது
சண்டை பிடிப்போம்

தாய் மாமாக்களிடம்
கோக்குமாக்கு பேசி
வம்பு வளர்ப்போம்

நொறுக்கு தீனிகள்
வயிறு புடைக்கத் தின்று
ஏப்பம் விடுவோம்

செல்லம் கொஞ்சி கொஞ்சி
தாத்தா பாட்டியை
ஏங்க வைப்போம்

ஆம்! நாங்கள் பாட்டி வீட்டிற்குப் போகிறோம்!

Wednesday, April 27, 2016

” பிடிக்குள் அடங்கா மெளனம் “என் 2 வது சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு





இலக்கியச்சோலை திங்களிதழ் மற்றும் ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘பிடிக்குள் அடங்கா மெளனம்’ சிறுகதை தொகுப்பு நூல் 24.04.2016 ஞாயிறன்று ஆரணியில் வெளியிடப்பட்டது.
           கல்விக்கோ, டாக்டர் ஜி.விஸ்வநாதன் வெளியிட முதல் பிரதியை ஆரணி அரசினர் மகளிர் பள்ளி தலைமையாசிரியர் பி. சுடர்கொடியும் ஆன்மிகச் செம்மல் இரா. குமரேசன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
              நூல் குறித்து இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை. தமிழினியன் ஆவர்கள் தன் கருத்துக்களை முன் வைத்தது வந்திருந்த பார்வையாளர்களை கவர்ந்தது.
              விஐடி வேந்தர் நூல் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். நூலாசிரியர் திருமதி பவித்ரா நந்தகுமார் ஏற்புரை நிகழ்த்தினார்.  நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.