blogger tricksblogger templates

Thursday, November 16, 2017

வேலூர், நவம்பர் 8, புதன்கிழமை. வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கம் மற்றும் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இணைந்து நடத்திய வீரமாமுனிவரின் 337 வது பிறந்த நாள் விழா மற்றும் வீரமாமுனிவர் விருது வழங்கும் விழாவில்21.10.2017 வாலாஜா தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற சங்கபொதுக்குழு கூட்டத்தில் பாராட்டி


நவராத்திரி விழா

விலங்குகள் சரணாலயம், விவேகம், பிக் பாஸ் ஓவியா, டெங்கு விழிப்பு உணர்வு ஆசிரியையின் வித்தியாச கொலு! - http://www.vikatan.com/news/tamilnadu/103419-this-teacher-performs-kolu-in-a-different-way.html

அக்டோபர் 2017 கவிதை உறவு இதழில்ஆரணி ரோட்ரி விழாவில்


10.09.2017 திருச்சியில் நடைபெற்ற “ நினைவுப் பகடைகள் ” எனும் சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசுக்கான கேடயமும் 10,000 ரூபாய் பணமுடிப்பும் திருமதி பத்மா மகாதேவா அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.


Sunday, June 25, 2017

25-06-2017 ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடைபெற்ற க.சீ. சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.            இவ்விழாவிற்கு தமிழின் முன்னணி எழுத்தாளரான மறைந்த க.சீ. சிவகுமாரின் மனைவி திருமதி. சாந்தி சிவகுமார் தலைமை வகித்தார்.  டாக்டர். அகில் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். கடந்த 2017 பிப்ரவரி மாதத்தில் மறைந்த எழுத்தாளர் க.சீ. சிவகுமார் நினைவாக உலகளாவிய சிறுகதைப் போட்டி நடைபெற்றது. அதில் பெண்கள் பிரிவில் என் “மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மெண்ட்சிறுகதை முதல் பரிசாக தேர்வு செய்யப்பட்டு கேடயமும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதில் எண்ணற்ற இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் ஒருங்கிணைப்பாளர் திரு. விசாகன் நன்றி கூறினார்.

 

Saturday, May 13, 2017

‘’ கவிப்பரிதி ‘’

30.04.2017 அன்று இலக்கியச்சோலை திங்களிதழ்,அரிமா சங்கம் இணைந்து நடத்திய கவியரங்கில் சிறப்பானதொரு கவிதையை வழங்கியமைக்காக
 ‘’ கவிப்பரிதி ‘’என்னும் பட்டமளித்த போது

Sunday, March 19, 2017

விகாஸ் வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் சிறப்பு விருந்தினராக


   18.03.2017 அன்று விகாஸ் வித்யாஸ்ரம் 
மெட்ரிக் பள்ளி நெசல் ஆரணி, மற்றும் 
விகாஸ் வித்யாலயா நர்சரி பள்ளி ஆரணி 
இணைந்து நடத்திய ஆண்டு விழாவில் 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 
மாணவ மாணவிகளுக்கு பட்டம் மற்றும் 
பரிசுகள் வழங்கிய புகைப்படங்கள்.

     விழாவில் பள்ளியின் முதல்வர் 
திருமதி. எம்.ஆர்.சரஸ்வதி, தாளாளர் 
திரு. ரமேஷ் ஆனந்த் மற்றும் விகாஸ் சேவா 
டிரஸ்ட்டின் தலைவர் திருமதி. கஸ்தூரி தலைமை 
தாங்கினர். வரவேற்புரைக்குப் பின் நான் ஆற்றிய 
சிறப்புரையில் சில. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 
கதை சொல்வதால் ஏற்படும் முக்கியமான மூன்று 
நன்மைகள் குறித்து பேசியதாவது:

     முதலில் கதை கேட்பதால் குழந்தைகளின் 
கற்பனை திறன் வளம் பெறுகிறது. அவர்களின் விரி 
சிந்தனை தூண்டப்பட்டு பல்வேறு விதமான கோணங்களில் 
அவர்கள் சிந்திக்க துவங்குகின்றனர். இரண்டாவதாக 
அவர்களுக்கான அறிவுரைகளை இயல்பாக அவர்களிடம் 
தெரிவித்தால் கசப்பு மருந்தை உட்கொள்பவர்கள் போல் அலுத்துக்கொள்வார்கள். ஆனால் இப்படியான 
அறிவுரைகளை கதை என்னும் இனிப்பு தடவி 
கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள். 
மூன்றாவதாக கதை கேட்கும் குழந்தைகளுக்கு 
புத்தி சாதூர்யம் பெருகுகிறது. பிற்கால வாழ்க்கையில் 
இக்கட்டான காலகட்டங்களில் இந்த புத்தி சாதூர்யம் 
மூலம் அவர்கள் துரிதமாக செயல்பட்டு தங்களை தற்காத்துக்கொள்வார்கள். அதனால் மாணவ 
மாணவிகள் பாட புத்தகங்களைத் தாண்டி கதைகள் 
கேட்கும், படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ள 
வேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாகப் பெற்றோர்கள் 
விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்..

8.3.2017 மகளிர் தினத்தன்று பெற்ற ”சிறுகதை தாரகை” விருது

  வேலூர் ஊரிசு கல்லூரியில் மகளிர் தின விழாவில்  சிறப்பு விருந்தினராக அழைத்து “சிறுகதை தாரகை” எனும் விருதை கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ். எழில் கிறிஸ்ட்தாஸ் வழங்கினார். உடன் கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர். E.R.S. குமார் மற்றும் டாக்டர். M. ஜெய செல்வதாஸ், நிதியாளுநர் திரு. டாக்டர். I. ஸ்டேன்லி ஜோன்ஸ், டாக்டர். கேப்டன் மணிவண்ண பாண்டியன், திரு. இன்ப எழிலன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் திரு. V. ருக்மணி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.