பெண்களுக்குத்தான் இரக்கமும்
சகிப்புத்தன்மையும் குலசொத்து
என்பது மற்றுமொரு முறை
இங்கே நிரூபணமாகியிருக்கிறது.
தன்னை காதலித்து கர்ப்பவதியாக்கி
சீரழித்து ஏமாற்றிய காமுகனைக்கூட
சட்டத்தின் வீச்சில் எதிர்கொள்கிறாள் பெண்
அமில வீச்சில் அல்ல.
கொடூரர்களே...
பெண்களின் மனதில் இந்த
நச்சு எண்ணத்தை
விதைக்காதீர்கள்...
பூவையர் ஆரம்பித்தால்...
பாதி ஆண்கள்
முகங்கள் சிதைந்து
நடமாட வேண்டியிருக்கும்.
நன்றி:தினமலர்-வாரமலர் 10.3.2013