Banner

என் அன்பான கணவருடன்

Saturday, July 6, 2013

பகிராத சங்கதிகள்...

   

கலையாத தூக்கம்...
உலரவைக்கப்படா கேசம்...
அன்பு எதிர்பாக்கும்
குழந்தைகள்...

அவ்வப்போது முறிந்து விழும்
மெல்லிய  மன உணர்ச்சிகள்...
நிரம்பி வழியும்
நிஜங்களின் சர்ச்சைகள்...

கனவாகிப் போன
சின்ன சின்ன ஆசைகள்...
நீண்டுக் கொண்டே போகும்
பகிரப்படா சங்கதிகள்...

ஓடிக் கொண்டே இருக்கிறோம்...
வீட்டையும் உடன்கட்டை
ஏற்றுகிறோம்...
நாங்கள்
வேலைக்கு செல்கிறோம்... !
நன்றி: தினமலர்-பெண்கள்மலர்