Banner

என் அன்பான கணவருடன்

Saturday, September 19, 2015

தின மலர்-பெண்கள் மலர் 19.09.2015 இதழில் வெளிவந்த கவிதை

     பல்லாங்குழி X கல்லாங்கா

அடர்ந்த மழை நாள் ஒன்றில்
பல்லாங்குழிக்கும் கல்லாங்காவுக்கும்
பெருத்த சண்டை

நானே கவனிப்பு திறனை அதிகரிக்கிறேன்
என்றது பல்லாங்குழி 
சிணுங்கல் அசங்கல் என் மூலம் தான்
என்றது கல்லாங்கா

சரிகுழி பாண்டியன் என்னுள் அடக்கம்
என்றது பல்லாங்குழி
உட்டைக் கல் ஆட்டம் எனக்குச் சொந்தம்
கர்ஜித்தது கல்லாங்கா

மூளைக்கு வேலை
அடித்துச் சொன்னது பல்லாங்குழி
கைவிரல்களின் குவிப்பை
விளக்கிச் சொன்னது கல்லாங்கா

அக்குபஞ்சர் புள்ளியை
பீற்றிக் கொண்டது பல்லாங்குழி
வழித்தல் கணக்கை
ஏற்றிச் சொன்னது கல்லாங்கா

பல்லாங்குழிக்கும் கல்லாங்காவுக்கும்
கூட்டாய் குழி வெட்டி
வெற்றி கண்டது இணையம்.
 

மங்கையர் மலர் இதழில்...

    செப்டெம்பர் 16-30 இதழில் ஜெயஸ்ரீராஜ் நினைவுச்சிறுகதை போட்டி-2015 ல் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை வெளிவந்துள்ளது