Banner

என் அன்பான கணவருடன்

Sunday, June 25, 2017

25-06-2017 ஞாயிற்றுக்கிழமை தேனியில் நடைபெற்ற க.சீ. சிவகுமார் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.



            இவ்விழாவிற்கு தமிழின் முன்னணி எழுத்தாளரான மறைந்த க.சீ. சிவகுமாரின் மனைவி திருமதி. சாந்தி சிவகுமார் தலைமை வகித்தார்.  டாக்டர். அகில் சர்மிளா வரவேற்புரை நிகழ்த்தினார். கடந்த 2017 பிப்ரவரி மாதத்தில் மறைந்த எழுத்தாளர் க.சீ. சிவகுமார் நினைவாக உலகளாவிய சிறுகதைப் போட்டி நடைபெற்றது. அதில் பெண்கள் பிரிவில் என் “மைசூர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது கம்பார்ட்மெண்ட்சிறுகதை முதல் பரிசாக தேர்வு செய்யப்பட்டு கேடயமும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதில் எண்ணற்ற இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் ஒருங்கிணைப்பாளர் திரு. விசாகன் நன்றி கூறினார்.