blogger tricksblogger templates

Tuesday, April 3, 2012

மெட்டி ஒலி இரகசியம்

               

நம் முன்னோர் நம்மை நல்வழியில் நெறிபடுத்துவதற்காக பல
அறிவுரைகளை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.அவற்றின் உண்மைக்
காரணம் அறியாமலேயே நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக்
கொண்டிருக்கிறோம் .  சந்தேகத்துடனும் பழக்கதோஷம் காரணமாகவும்
அந்த அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதை விட உண்மை
 நிலவரம் அறிந்து பின்பற்றலாம். அதில் சில நம்பிக்கைகள் இக்காலத்திக்கேற்றவாறு திருத்தங்களுக்கு உள்ளாக வேண்டியவை என்பதையும் மறந்துவிடக்கூடாது.

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் சமயத்தில் உடல் நலத்தில் அயர்ச்சியும்
பலவீனமும் உண்டாகும். அதனால் தான் அக்காலத்தில் பரிபூரண ஓய்வு கொடுக்க வேண்டிஅன்றாட வேலைகளிலிருந்து அவளை ஒதுக்கி வைத்தனர்.சத்துள்ள ஆகாரம்  கொடுத்து அவள் உடல் நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார்கள்.

இன்று வேலை,தனிக்குடித்தனம் போன்ற காரணங்களால் உடலுக்கு
என்னவானாலும் அவரவர் கடமையை செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். பல
கிராமங்களில் ஏன் நகர்ப்புறங்களில் கூட பழைய சம்பிரதாயத்தைப் பிடித்துக்
கொண்டு அந்த சமயங்களில் வீட்டுக்கு வெளியேயோ உபயோகமற்றதை
போடும் தனி அறையிலோ பெண்களுக்கு இடம் கொடுப்பது தேவையற்றது.

வாயிற்படிக்கு நேரே குப்பை சேர்க்கக் கூடாது,எச்சில் இறைக்கும் தீட்டு துடைக்கும்,குப்பையை வாராமல் ஒதுக்கினால் நல்ல நாட்களில் நம்மை மூலையில் ஒதுக்கி விடும் என்பன போன்றவை நாம் சுத்தத்தை கடைபிடிக்க சொன்ன வார்த்தைகள். அதை சாதாரணமாகச் சொன்னால் ஏற்கமாட்டார்கள் என்பதால் நம் முன்னேற்றத்தோடும் இயற்கை நிகழ்வோடும் சம்பந்தப்படுத்தி
கடுமையாக வலியுறுத்தினார்கள்.

ஆனால், நல்ல நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால் ‘ நீ கண்ட இடத்தில்
குப்பை சேர்த்தாய் அதான் இப்படி ஆகிவிட்டது’ என்று மருமகளை வையும் மாமியார்கள் இன்றும் உண்டு.

எங்கள் வீட்டு அருகாமையில் ஒரு மாமியார் தன் மருமகள்
அமாவாசை,கிருத்திகை,முன்னோர் திதி போன்ற தினங்களில் மாதவிலக்கு
ஏற்பட்டால் ‘ நல்ல நாள் அதுவுமா ஒதுங்கிட்டியா,மனசுல நல்ல எண்ணம்
இருந்தா தானே,அதான் கடவுளா பார்த்து ஒதுக்கிட்டான்’ என்று சாடுவார்.
இதற்கு பயந்தே அந்த பெண்’ நாள்’ தள்ளிப் போக அடிக்கடி மாத்திரை
சாப்பிட்டு, இன்று கர்ப்பப்பை கோளாறு ஏற்பட்டு, அதற்கென தனியே சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறாள். சுத்தும் குறித்து சொல்லப்பட்டதை இயற்கையான நிகழ்வுக்கு காரணமாக்கி ஏளனம் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

பெண்கள் நகைகள் அணிய காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கைகளில் வளையல்கள் அணிவதால் மணிக்கட்டு பகுதி சிறப்பாக
செயல்படுகிறது என்றும், காலில் மெட்டி போடுவதால் கருப்பையின் வளர்ச்சி சீராக உள்ளது என்றும் இரு கைகளிலும் வங்கி அணிவதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க படுகிறது என்றும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மெட்டி ஒலிக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருப்பது நம் எத்தனை
பேருக்கு தெரியும்? பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் ஆபரணங்கள் பெரும்
பங்கு வகிக்கிறது என்பதை அறிந்தே நகைகள் அணிந்து கொள்ளும் முறை
வழக்கமாக்கப் பட்டுள்ளது. ஆனால் தற்போது நாகரீக வளர்ச்சியில்
வளையல்கள் கூட மறைந்து வருகின்றன. மாறாக தொப்புளில் கம்மல்கள்
இடம் பெயர்ந்து விட்டன.

அக்காலத்தில் பெண்கள் மரியாதை காரணமாக கால் மேல் கால்
போட்டு உட்காரக் கூடாது என்று சொல்வார்கள்.ஆனால் உண்மையில்
பெண்கள் அவ்வாறு உட்கார்ந்தால் அவர்களின் கருப்பை பாதிப்புக்குள்ளாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மூக்கு குத்தினால் பொறுமை, சாந்த குணம் ஏற்படும் என நம்புகிறோம்.இவ்வாறு செய்தே எங்களை அடக்கி ஆள்கிறார்கள் என போர்க்கொடி தூக்குவோரும் உண்டு.

கர்ப்பகாலத்தில் வளைகாப்பு நடத்தி பெண்கள் கை நிறைய
கண்ணாடி வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றும்
சொல்லப்படுகிறது. அர்த்தம் தெரியாமலேயே இதையும்
பின்பற்றுகிறோம்.அவ்வாறு அணிவது வயிற்றிலிருக்கும்
குழந்தையின் கேட்டும் திறனை அதிகரிக்கிறது.

அதனால் தோழிகளே காரணம் அறிந்து காரியம் நிறைவேற்றுவோம்.சரியா?

No comments:

Post a Comment