Banner

என் அன்பான கணவருடன்

Monday, July 7, 2014

பெண்மையை மதிப்போம்


எங்களுக்கும் உங்களுக்குமிடையே
மாறுபட்டு நிற்பது
சில மெல்லிய படைப்பு முடிச்சுகளே
அதை நீர் அறிந்தவராவீர்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
எத்தனை எத்தனை சேதிகள்?
பெண்கள் மீதான அலைவரிசை
மாறிப் போனதன் அபத்தமே
பெருகிப் போன இத்துணை 
வன்கொடுமைகள்

சகோதரனாக சிநேகிதனாக
கணவனாக சகமனிதனாக
பார்த்து பழகிய கண்கள்
பலவேளைகளில் சந்தேகித்து நிற்கிறது
கொடூரனாய் இருக்குமோ எனும்
அச்சம் தோய்ந்த பார்வையில்...
எங்கள் இயல்பு தொலைந்துபோகும் 
தருணங்கள் அவை

பட்டுப்புழுவாய் வாழ்ந்த நாங்கள்
பட்டாம்பூச்சிகளாய் தற்போதே 
மகிழ்ந்திருக்கிறோம்
மீண்டுமொரு கூட்டுப்புழு 
வாழ்க்கையை பரிசளிக்காதீர்
உங்கள் சுவடுகளை நீங்களே 
இழந்தவர்களாவீர்


 நன்றி : தின மலர்-பெண்கள் மலர்

1 comment:

  1. தினமலர் - பெண்கள் மலர் கடைசி அட்டையிலும் சனிக்கிழமையன்றே படித்து மகிழ்ந்தேன்.

    அர்த்தமுள்ள அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete