Banner

என் அன்பான கணவருடன்
'பிடிக்குள் அடங்கா மெளனம்' புத்தக வெளியீட்டில் VIT வேந்தர்
சிறந்த நூலாசிரியருக்கான தமிழக அரசின் விருது
சாதனை பெண்கள் விருது 2020
VIT வேந்தரிடம் பெற்ற தமிழன்னை விருது
Guest motivational speech in Bharathi college

Sunday, December 22, 2013

 
கற்றலை தாண்டி
 
ஒரு மதிய பொழுதின்
இரண்டாவது பாட வேளையில்
தலைவலி எனச் சொல்லி
அமர்ந்திருந்த நேரத்தில்
அயர்ச்சியில் நிமிடங்கள் கரைய...
என்னாச்சு? தண்ணி வேணுமா மிஸ்?
நீர் போத்தலை எடுத்து வந்தான்
எப்போதும் பெயிலாகும் முத்து
கொஞ்சமே கொஞ்சம் தைலம் தடவுறீங்களா?
கணித உபகரண பெட்டியிலிருந்த
குட்டி டப்பாவை எடுத்து வந்தான் சபரி.
கேண்டீனில் காபி வாங்கி வரட்டுமா?
பரபரத்த கால்களுக்கு அனுமதி
கோரியபடி கேள்வியுடன் அருண்
என் மெல்லிய புன்னகை
அவர்களின் ஆவலுக்கு
இரையோ இரைச்சியோ
போட்டிருக்கக் கூடும்.
கற்றலில் பிந்தங்கிய அந்த
மாணவர்களின் தோழியாயிருந்தேன்
சில நிமிடங்களுக்கு
முதல் மதிப்பெண் எடுக்கும் பாலாஜி
இப்பொழுதும் ஆழ்ந்திருந்தான் தன் புத்தகத்தினூடே
என் புருவச்சுருக்கம் உள்ளுக்குள் மணியடித்தது
கற்றலை தாண்டி இப்போது நான்
கவனம் செலுத்த வேண்டியது
இவர்களுக்கா அவனுக்கா
எனக்குள் சின்ன தடுமாற்றம்...

9 comments:

  1. //கற்றலை தாண்டி இப்போது நான், கவனம் செலுத்த வேண்டியது, இவர்களுக்கா அவனுக்கா, எனக்குள் சின்ன தடுமாற்றம்...//

    ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது. வெறும் படிப்பு எதற்கும் உதவாது. உலக அனுபவங்கள் கற்க வேண்டும். கற்பிக்கப்படவும் வேண்டும். மனிதாபிமானத்துடன் உதவ நினைக்கும் மாணவர்களுக்காகவும் தாங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமே.

    சிந்திக்க வைக்கும் அழகான படைப்பு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  2. அருமையான கவிதை....
    உண்மையில் சிந்திக்க வேண்டியதே...

    ReplyDelete
  3. அருமையான கேள்வி
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கண்டிப்பாய் பாலாஜிக்குதான். சக மனிதனி துக்கத்தை உணரா படிப்பினால் பலனில்லை.

    ReplyDelete
    Replies
    1. அது அவ்வளவு பெரிய துக்கம் ஒன்றும் இல்லையே.... இருப்பினும் நன்றி தங்கள் கருத்துக்கு.

      Delete
  5. நடைமுறையில் முதல் பெஞ்ச் - படிக்கிற புள்ளங்களால மத்தவங்களுக்கு பிரயோஜனமில்ல! லாஸ்ட் பென்ச் பய புள்ளங்கதான் அவசரத்துக்கு உதவுவாங்க! உங்களோட கேள்வி - நியாயமானதுதான்! ரவிஜி...

    ReplyDelete